×

தி.மலை விவசாயி மீது உள்நோக்கத்துடன் குண்டர் சட்டம் போடப்பட்டதாக தெரிகிறது: ஐகோர்ட் கருத்து

சென்னை: திருவண்ணாமலை விவசாயி அருள் ஆறுமுகம் மீது உள்நோக்கத்துடன் குண்டர் சட்டம் போடப்பட்டதாக தெரிகிறது என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள் இயக்க ஒருங்கிணைப்பாளர் அருள் ஆறுமுகம் மீதான குண்டர் சட்டம் ரத்து கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அருள் ஆறுமுகம் மனைவி பூவிழி கீர்த்தனா தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், சுந்தர் மோகன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. தீவிர குற்றத்தில் ஈடுபட்டதற்கான முகாந்திரமும் இல்லாத நிலையில் மக்களை தூண்டினார் என குற்றம்சாட்டப்பட்டுள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர். நிலம் வழங்க முன்வருவோரை தடுத்தார் என்றும் விவசாயி அருள் ஆறுமுகம் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

The post தி.மலை விவசாயி மீது உள்நோக்கத்துடன் குண்டர் சட்டம் போடப்பட்டதாக தெரிகிறது: ஐகோர்ட் கருத்து appeared first on Dinakaran.

Tags : D. ,ICourt ,Chennai ,Madras High Court ,Arul Arumugam ,Dinakaran ,
× RELATED கோடைகாலத்தில் விலங்குகளுக்கு நீர்,...